செய்திகள்

கேரளாவில் மீண்டும் மா.கம்யூனிஸ்ட், பா.ஜ.க. தொண்டர்கள் மோதல் - 7 பேர் காயம்

Published On 2018-07-01 14:41 GMT   |   Update On 2018-07-01 14:41 GMT
அரசியல் அடிதடிக்கு பேர்போன கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டத்தில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பா.ஜ.க. தொண்டர்கள் இடையிலான மோதலில் 7 பேர் காயமடைந்தனர். #CPIBJPworkersclash
திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் பா.ஜ.க. தொண்டர்களிடையே அடிக்கடி அரசியல் மோதல்கள் நடந்து வருகின்றனர்.

கடந்த மே மாதத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் பா.ஜ.க. தொண்டர் அடுத்தடுத்து ஒரே நாளில் கொல்லப்பட்டனர்,

இந்நிலையில்,  கண்னூர் மாவட்டத்தில் இன்று காரில் சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்களை மோட்டார் சைக்கிள்களில் வந்த பா.ஜ.க. தொண்டர்கள் வழிமறித்து தாக்கியதாகவும், இந்த மோதலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 4 பேரும், பா.ஜ.க.வினர் 3 பேரும் காயமடைந்ததாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

காயமடைந்த அனைவரும் மாட்டானூர் மற்றும் தலச்சேரி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், இவர்களில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. #CPIBJPworkersclash 
Tags:    

Similar News