செய்திகள்

மகாராஷ்டிராவில் 16 கோடி மரங்கள் நடும் திட்டத்தை பட்னாவிஸ் தொடங்கி வைத்தார்

Published On 2018-07-01 14:07 GMT   |   Update On 2018-07-01 14:07 GMT
மகாராஷ்டிரா மாநிலத்தில் 16 கோடி மரக்கன்றுகளை நடும் திட்டத்தை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் இன்று தொடங்கி வைத்தார்.
மும்பை :

மகாராஷ்டிரா மாநிலம், தானே மாவட்டத்தில் உள்ள கல்யான் எனும் இடத்தில் மாநிலம் முழுதும் இந்த ஆண்டுக்கு 16 கோடி மரக்கன்றுகளை நடும் திட்டத்தை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் இன்று தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து, பட்னாவிஸ் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது :-

’இயற்கைக்கு தொண்டாற்ற மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. 2016-ம் ஆண்டு 2 கோடி மரக்கன்றுகளையும், 2017-ம் ஆண்டு 5 கோடி மரக்கன்றுகளையும் வெற்றிகரமாக நட்டு முடிக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு 16 கோடி மரக்கன்றுகளை நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இது மிகப்பெரிய சவால் என்று எனக்கு தெரியும் ஆனால், நமது பலம் இதை விட பெரியது. எனவே, நாம் அனைவரும் ஒன்றினைந்து மரக்கன்று நடும் திட்டத்தில் பங்கேற்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News