செய்திகள்

பி.ஜி. டிப்ளமோ தேர்வு எழுத அஜய் சிங் சவுதாலாவுக்கு பரோல் வழங்கியது டெல்லி ஐகோர்ட்

Published On 2018-06-29 10:52 GMT   |   Update On 2018-06-29 10:52 GMT
ஆசிரியர் தேர்வு முறைகேடு வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் அஜய் சிங் சவுதாலா தேர்வு எழுதுவதற்காக பரோலில் சென்று வர டெல்லி ஐகோர்ட் அனுமதி வழங்கி உள்ளது. #AjayChautala
புதுடெல்லி:

அரியானா மாநிலத்தில் கடந்த 2000ம் ஆண்டு ஆசிரியர்களை தேர்வு செய்ததில் ஊழல் செய்தது தொடர்பாக இந்திய தேசிய லோக் தள் தலைவர் சவுதாலா, அவரது மகன் அஜய் சவுதாலா மற்றும் 53 பேர் மீது குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். இதில், அஜய் சிங் சவுதாலாவுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு, தண்டனை அனுபவித்து வருகிறார். 

இந்நிலையில், சிறையில் இருந்தபடியே தொலைதூரக் கல்வி மூலம் முதுநிலை டிப்ளமோ படித்து வரும் அஜய் சிங் சவுதலா தேர்வு எழுதுவதற்காக பரோலில் சென்று வருகிறார்.

அவ்வகையில், நாளை நடைபெற உள்ள தேர்வை எழுதுவதற்காக பரோலில் அரியானா செல்ல அனுமதி கேட்டு அஜய் சிங் சவுதாலா சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், அரியானா மாநிலம் சிர்சாவில், நாளை பிற்பகல் பி.ஜி. டிப்ளமோ தேர்வு நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த மனுவை விசாரித்த நீதிபதி வினோத் கோயல், தேர்வு எழுதுவதற்காக அஜய் சவுதாலாவுக்கு பரோல் வழங்கி உத்தரவிட்டார். இன்று சவுதாலாவை சிறையில் இருந்து பரோலில் விடுவிக்க வேண்டும் என்றும், ஜூலை 1-ம் தேதி அவர் சரண் அடைய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். #AjayChautala
Tags:    

Similar News