செய்திகள்

டெல்லி ஜனாதிபதி மாளிகையில் செசல்ஸ் அதிபருக்கு வரவேற்பு

Published On 2018-06-25 10:54 IST   |   Update On 2018-06-25 10:54:00 IST
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள செசல்ஸ் அதிபர் டேனிக்கு டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. #SeychellesPresident
புதுடெல்லி:

செசல்ஸ் அதிபர் டேனி பயூரே 6 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். தனது பயணத்தின் ஒரு பகுதியாக சனிக்கிழமை குஜராத் மாநிலத்தில் உள்ள சமர்மதி ஆசிரமத்திற்கு சென்றார். நேற்று உலக பாரம்பரிய இடமான பழைய கோவாவில் தனது உயர்மட்டக் குழுவினருடன் சென்று சுற்றிப் பார்த்தார். அங்குள்ள தொல்பொருள் அருங்காட்சியகத்திற்கும் சென்று பார்வையிட்டார்.



இந்நிலையில், செசல்ஸ் அதிபர் டேனி டெல்லியில் இன்று மகாத்மா காந்தி சமாதிக்கு சென்று மரியாதை செலுத்தினார். அதன்பின்னர் ஜனாதிபதி மாளிகை சென்ற அவருக்கு பாரம்பரிய முறைப்படி சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் அவரை வரவேற்றனர்.

இந்த சந்திப்பைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி தனியாக சந்தித்து பேச உள்ளார். இந்த சந்திப்பின்போது, இருநாட்டு உறவுகளை வலுப்படுத்துவது, ராணுவம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்த உள்ளனர்.  #SeychellesPresident
Tags:    

Similar News