செய்திகள்

ஆந்திராவில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 4 பொறியியல் மாணவர்களின் உடல்கள் மீட்பு

Published On 2018-06-24 09:20 GMT   |   Update On 2018-06-24 09:36 GMT
ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் கிருஷ்ணா மாவட்டத்தில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 4 பொறியியல் மாணவர்களின் உடல்களை மீட்புப்படையினர் மீட்டுள்ளனர்.

ஐதராபாத்:

ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் கிருஷ்ணா மாவட்டத்திற்குட்பட்ட காஞ்சிகசர்லா பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்று உள்ளது. இந்த கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் ஐந்து மாணவர்கள் நேற்று, அருகில் உள்ள கிருஷ்ணா ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர். 

அப்போது அவர்களில் ஒருவர் ஆற்றில் தவறி விழுந்துள்ளார். இதையடுத்து மற்ற மூன்று பேரும் ஆற்றுல் குதித்து அவரை காப்பாற்ற முயற்சித்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக நான்கு பேரும் நீரில் அடித்து செல்லப்பட்டனர். இதையடுத்து இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. உடனடியாக அப்பகுதிக்கு விரைந்த போலீசார் மீட்புப்பணிகளை தொடங்கினர். இந்திய கடற்படையை சேர்ந்த வீரர்களும் இந்த மீட்புப்பணியில் ஈடுபட்டனர். 



இதையடுத்து இன்று நான்கு பேரின் உடல்களையும் மீட்புப்படையினர் மீட்டனர். உயிரிழந்தவர்கள் கிருஷ்ணா சய்தன்யா ரெட்டி, ஸ்ரீநாத், ராஜ் குமார் பில்லா, பிரவீன் என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு வருத்தம் தெரிவித்துள்ளார். 

இன்ப சுற்றுலா சென்ற இடத்தில் நான்கு மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News