செய்திகள்

இந்தூரில் பிரபல ஆன்மிக தலைவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

Published On 2018-06-12 15:48 IST   |   Update On 2018-06-12 15:48:00 IST
மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா மாநிலங்களில் சமூகச் சேவைகளில் ஈடுபட்டுவந்த பிரபல ஆன்மிக தலைவர் பய்யூ மஹராஜ் இன்று தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுகொண்டு உயிரிழந்தார். #BhayyuMaharajsuicide #SpritualguruBhayyuMaharaj
இந்தூர்:

மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா மாநிலங்களில் சமூகச் சேவைகளில் ஈடுபட்டுவந்த பிரபல ஆன்மிக தலைவர் பய்யூ மஹராஜ். உதய் சிங் தேஷ்முக் என்னும் இயற்பெயரை கொண்ட இவருக்கு மத்தியப்பிரதேசம் மாநிலம், இந்தூர் நகரில் மிகப்பெரிய ஆசிரமம் உள்ளது.

மகாராஷ்டிரா முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பய்யூ மஹராஜின் சீடர்களாக உள்ளனர். இதுதவிர பல லட்சக்கணக்கானவர்களின் ஆன்மிக குருவாக இருந்த இவர், இன்று தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுகொண்டு ஆபத்தான நிலையில் இந்தூரில் உள்ள பாம்பே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த செய்தி பரவியதும் ஆஸ்பத்திரியின் முன்னர் அவரது சீடர்கள் பலர் திரண்டனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி பய்யூ மஹராஜ் உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்ததும் அவர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.



ஆன்மிக பணிகள் மட்டுமின்றி பல்வேறு சமூகச் சேவைகளிலும் ஈடுபட்டு வந்த இவர், ஊழலுக்கு எதிரான அன்னா ஹசாரேவின் போராட்டம் முன்னர் உச்சகட்டத்தில் இருந்தபோது, ஹசாரேவுக்கும் அரசுக்கும் இடையில் சமாதானத்தை ஏற்படுத்த முயன்றார். ஆன்மிக தலைவர் பய்யூ மஹராஜுக்கு மத்தியப்பிரதேச மாநில அரசு கடந்த ஏப்ரல் மாதம் இணை மந்திரி பதவி அளிப்பதாக அறிவித்தது நினைவிருக்கலாம். #BhayyuMaharajsuicide #SpritualguruBhayyuMaharaj


Tags:    

Similar News