செய்திகள்

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு முடித்து டெல்லி திரும்பினார் பிரதமர் மோடி

Published On 2018-06-10 17:07 GMT   |   Update On 2018-06-10 17:07 GMT
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி இன்று இரவு சீனாவில் இருந்து டெல்லி திரும்பினார். #SCOsummit #PMModi
புதுடெல்லி:

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு ஆண்டுதோறும் மாநாடு நடத்தி வருகிறது. இந்த அமைப்பில் ரஷ்யா, சீனா, பாகிஸ்தான் உள்பட பல்வேறு நாடுகள் அங்கம் வகிக்கின்றன. கடந்த ஆண்டு இந்த அமைப்பில் இந்தியாவும் தன்னை ஒரு உறுப்பினராக இணைத்துக் கொண்டது.

சுமார் 18 நாட்டு தலைவர்கள் கலந்து கொண்ட இந்த மாநாட்டில் இந்தியாவும் பாகிஸ்தானும் இந்த ஆண்டில் தான் முதல் முறையாக பங்கேற்றன.

இந்த மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, தனது சிறப்பு உரையை நிகழ்த்தினார். மேலும், சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து இந்தியாவுடனான உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதற்கிடையே, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு இன்று நிறைவடைந்தது.

இந்நிலையில், சீனாவில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி தாயகம் புறப்பட்டார். அங்கிருந்து விமானத்தில் வந்த மோடி இரவில் டெல்லி திரும்பினார். அவரை இந்திய அதிகாரிகள் உற்சாகமாக வரவேற்றனர். #SCOsummit #PMModi
Tags:    

Similar News