செய்திகள்

ஏ.சி. எந்திரம் பழுது - உ.பி. மருத்துவமனையில் 5 பேர் மரணம்

Published On 2018-06-09 04:38 IST   |   Update On 2018-06-09 04:38:00 IST
உத்தரபிரதேசம் மாநிலத்தில் மருத்துவமனையில் ஏ.சி. எந்திரம் பழுதால் 2 நாட்களில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
கான்பூர்:

உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் கணேஷ் சங்கர் வித்யார்த்தி மருத்துவ கல்லூரி உள்ளது. இக்கல்லூரியின் கீழ் லாலா லஜ்பத் ராய் என்கிற மருத்துவமனை இயங்கி வருகிறது.

இந்த மருத்துவமனையில், அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த முதியவர்கள் 5 பேர் அடுத்தடுத்து உயிர் இழந்தனர். 2 நாட்களில் 5 முதியவர்கள் உயிர் இழந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

மருத்துவமனையின் அவசர சிகிச்சைப்பிரிவில் உள்ள ஏ.சி. எந்திரம் கடந்த சில தினங்களாக வேலை செய்யவில்லை என்றும், அதனால் வெயிலின் தாக்கத்தை தாங்கி கொள்ள முடியாமல் முதியவர்கள் உயிர் இழந்ததாகவும் அவர்களுடைய உறவினர்கள் குற்றம் சாட்டினர். ஆனால் மருத்துவமனை நிர்வாகம் இந்த குற்றச்சாட்டை மறுக்கிறது.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.
Tags:    

Similar News