செய்திகள்

பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் எடைக்கு ஏற்ப பணம் - குஜராத் ரெயில் நிலையத்தில் புதிய இயந்திரம்

Published On 2018-06-07 12:00 GMT   |   Update On 2018-06-07 12:00 GMT
குஜராத் மாநிலம் வதோரா ரெயில்நிலையத்தில் பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் அதன் எடைக்கு ஏற்பட பணம் தரும் இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது. #Vadodara
அகமதாபாத்:

குஜராத் மாநிலம் வதோரா ரயில்நிலையத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தும் விதமாக பிளாஸ்டிக் ஒழிப்பு இயந்திரம் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தில் பிளாஸ்டிக் பாட்டில்களை உள்ளே போட்டால் அவை சுக்கு நூறாக உடைக்கப்படுகிறது.

பின்பு நாம் போடும் பிளாஸ்டிக் பாட்டில்கள் பொருளின் எடைக்கு ஏற்ப பணம் வழங்குகிறது. பிளாஸ்டிக் பொருட்களை போட்ட பிறகு இயந்திரத்தில் பயணிகள் தங்களது மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும். பின்னர் தங்கள் பேடீஎம் (Paytm) கணக்கில் ரூ.5 பணத்தை பெற்றுக்கொள்ளலாம்.

வதோரா ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள இந்த புதிய இயந்திரத்திற்கு பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. ரயில் நிலையத்தில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை குறைப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக சுற்றுசூழல் தினமான ஜூன் 5-ம் தேதி இந்த நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த ஆண்டிற்குள் பிளாஸ்டிக் பொருட்களை ஒழிக்கும் விதமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. #Vadodara
Tags:    

Similar News