செய்திகள்

2017-18ம் ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 6.7 சதவிகிதமாக சரிவு

Published On 2018-05-31 20:30 IST   |   Update On 2018-05-31 21:16:00 IST
2017-18ம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.7 சதவிகிதமாக உள்ளது என மத்திய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Indianeconomy #GDP
புதுடெல்லி :

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2017-18ம் ஆண்டில் 6.7 சதவிகிதமாக உள்ளது என மத்திய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோடி பிரதமராக பதவி ஏற்ற 2014-ஆம் ஆண்டு முதல் கடந்த நான்காண்டுகளில் மிகவும் குறைவான ஜிடிபி வளர்ச்சி இதுவாகும். 

ஆனால், கடந்த 7 காலண்டுகளில் இல்லாத வகையில் கடந்த நிதி ஆண்டின் கடைசி காலாண்டான (ஜனவரி- முதல் மார்ச் வரை) ஜிடிபி 7.7 சதவிகிதமாக அபார வளர்ச்சியை எட்டியுள்ளது. இது ப்ளூம்பர்க் நிதி நிறுவனம் கணித்த 7.4 என்ற ஆளவை விட 0.3 சதவிகிதம் அதிகமாகும். கடந்த நிதி ஆண்டின் முதல் மூன்று காலாண்டுகளின் ஜிடிபி முறையே 5.6 %, 6.3 %, 7.0% என இருந்தது.

கடந்த நிதியாண்டில் நாட்டின், விவசாயம் 4.5 %, உற்பத்தி 9.1 % மற்றும் கட்டுமான துறைகள் 11.5 % என சீரான வளர்ச்சியை எட்டியுள்ளது. நாட்டின் பொருளாதர வளர்ச்சியில் இந்த மூன்று துறைகளும் முக்கிய பங்காற்றியுள்ளதாக  புள்ளியியல் அலுவலகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை ஏற்றம், அலுமினியம் மற்றும் எக்கு பொருட்களுக்கு அமெரிக்க அதிகளவு வரி விதிப்பு, மற்றும் பண மதிப்பிழப்பு போன்ற பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக இந்த ஆண்டு மட்டும் அமெரிக்க டாலருக்கு நிகரான  இந்திய ரூபாயின் மதிப்பு 5 % குறைந்துள்ளது. #Indianeconomy #GDP
Tags:    

Similar News