செய்திகள்

பாதுகாப்புத்துறையில் ஊழல் செய்த அதிகாரிகள் மீது மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் - ராகுல் காந்தி

Published On 2018-05-31 19:00 IST   |   Update On 2018-05-31 19:00:00 IST
ஏ.என் 32 ரக போர் விமானத்திற்கான உதிரி பாகங்கள் கொள்முதல் செய்ய லஞ்சம் பெற்ற பாதுகாப்பு துறை அதிகாரிகள் மீது பிரதமர் மோடி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். #NarendraModi #RahulGandhi
புதுடெல்லி :

உக்ரைன் நாட்டிடம் இருந்து ஏ.என் 32 ரக போர் விமானத்திற்கான உதிரி பாகங்கள் கொள்முதல் செய்வதற்காக லஞ்சம் கொடுக்கப்பட்டது தொடர்பாக உக்ரைன் அரசு விசாரனை நடத்தி வருவதாக நேஷனல் டெய்லி எனும் நாளிதழ் செய்தி வெளியிட்டது.
இது குறித்து உக்ரைன் நாட்டு ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதில் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சக அதிகாரிகளுக்கும் தொடர்ப்பு இருப்பதாக சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது.

இதுகுறித்து ட்விட்டரில் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளதாவது :-

ஏ.என் 32 ரக போர் விமானத்திற்கான உதிரி பாகங்கள் கொள்முதல் தொடர்பாக இந்திய பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உக்ரைன் அரசிடம் இருந்து லட்சக் கணக்கான அமெரிக்க டாலர் பணத்தை துபாயில் லஞ்சமாக பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நாட்டின் பாதுகாவலன் என சுயதம்பட்டம் அடித்துக்கொள்ளும் பிரதமர் மோடி அவர்களே, இதில் குற்றம்சாட்டப்பட்டுள்ள உங்கள் அரசின் ஊழல் அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” 

என அவர் தெரிவித்துள்ளார். #NarendraModi #RahulGandhi
Tags:    

Similar News