செய்திகள்

மதிப்பெண் அடிப்படையிலான கல்வி முறையை மாற்ற வேண்டும் - நிபுணர்கள் கருத்து

Published On 2018-05-30 17:38 IST   |   Update On 2018-05-30 17:38:00 IST
இந்தியாவில் மதிப்பெண் அடிப்பையில் மாணவர்களை மதிப்பீடு செய்வது கல்வி முறையின் தரத்தை குறைக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். #Indiaeducationsystem
புதுடெல்லி:

இந்தியாவில் உள்ள பல கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டுமே கல்வி கற்றுக் கொடுக்கப்படுகின்றன. இதனால் மாணவர்கள் மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மனப்பாடம் செய்து தேர்வு எழுதிகின்றனர். அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் படிக்கவில்லை.

இதுகுறித்து பேசிய இந்திய விண்வெளி கழகத்தின் முன்னாள் தலைவர், ஜி.மாதவன் நாயர், மதிப்பெண் அடிப்படையிலான கல்வி முறை மிகவும் பழைய நடைமுறை. இது ஆரோக்கியமானது அல்ல. அறிவை வளர்த்து கொள்ள உதவுவது கிடையாது.


மணிப்பால் குளோபல் கல்வி சர்வீஸ் தலைவர் கூறுகையில், இப்போது உள்ள கல்வி முறை மதிப்பெண்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறது. மாணவர்களை உற்றாகப்படுத்த படிப்பை தவிர மற்ற துறைகள் குறித்து கற்றுக்கொடுக்க வேண்டும். செயல்முறை கல்வி மிகவும் முக்கியம்.

ஒவ்வொரு மாணவர்களுக்கு தனித்தனி திறமைகள் உள்ளன. அவர்கள் அனைவரையும் ஒரே கல்வி முறையில் திணிப்பது சரியன்று. அவர்களுக்கு ஏற்றவாறு கல்வி அளிக்க வேண்டும். இந்தியாவில் 3 ஆயிரத்திற்கும் அதிகமான தரமற்ற பொறியியல் கல்லூரிகள் உள்ளன. அதன் தரத்தை மேம்படுத்த வேண்டும்.

அதிக எண்ணிக்கையில் கல்லூரிகள் இருப்பதை விட குறைந்த எண்ணிக்கையில் தரமான கல்லூரிகள் இருக்க வேண்டும் எனக்குறிப்பிட்டார். #Indiaeducationsystem

Tags:    

Similar News