செய்திகள்

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கிலும் ப.சிதம்பரத்திற்கு சிக்கல் - முன்ஜாமீன் மனு தாக்கல்

Published On 2018-05-30 08:18 GMT   |   Update On 2018-05-30 08:18 GMT
ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் கைது செய்யப்படுவதில் இருந்து இடைக்கால நிவாரணம் பெற்ற ப.சிதம்பரம் தற்போது ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். #INXMediaCase #ChidambaramAnticipatoryBail
புதுடெல்லி:

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி  சிதம்பரத்தை சி.பி.ஐ. கைது செய்து விசாரணை நடத்தியது. ப.சிதம்பரம் மத்திய நிதி மந்திரியாக இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாட்டு நிதியை பெறுவதற்கு ஒப்புதல் வழங்கியதில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும், இதில் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனங்கள் ஆதாயம் பெற்றதாகவும் சி.பி.ஐ. குற்றம்சாட்டியுள்ளது.



இந்நிலையில், ப.சிதம்பரத்திடமும் விசாரணை நடத்த சி.பி.ஐ. முடிவு செய்தது. அதன்படி மே 31-ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி ப.சிதம்பரத்துக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியிருந்தது. எனவே, தன்னை கைது செய்யாமல் இருக்க, டெல்லி ஐகோர்ட்டில் ப.சிதம்பரம் இன்று முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.

ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு வழக்கில் ஜூன் 5-ம் தேதி வரை ப.சிதம்பரத்தை கைது செய்ய டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று இடைக்கால தடை விதித்துள்ள நிலையில், இரண்டாவது வழக்கில் முன்ஜாமீன் கேட்டுள்ளார். #INXMediaCase #ChidambaramAnticipatoryBail
Tags:    

Similar News