செய்திகள்

கைரானா பாராளுமன்ற இடைத்தேர்தல் - 73 பூத்களில் மறு வாக்குப்பதிவுக்கு பரிந்துரை

Published On 2018-05-29 15:23 IST   |   Update On 2018-05-29 15:23:00 IST
உத்தரப்பிரதேச மாநிலம் கைரானா பாராளுமன்ற தொகுதிக்கு நடைபெற்ற தேர்தலில் 73 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. #kairanabypoll
லக்னோ:

உத்தரப்பிரதேச மாநிலம் கைரானா தொகுதி எம்.பி ஹுகும் சிங் சமீபத்தில் உயிரிழந்தார். இதனை அடுத்து, கைரானா உள்ளிட்ட காலியாக இருந்த 4 பாராளுமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. மேலும், மேற்கு வங்காளம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் 10 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று மேற்கண்ட அனைத்து தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. கைரானா மற்றும் நூர்ப்பூர் தொகுதியில் உள்ள பல வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் கோளாறு செய்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து கைரானா தொகுதியில் 73 வாக்குச்சாவடிகளில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர். இதற்கு அனுமதி கிடைத்தால் நாளை 73 வாக்குச்சாவடிகளிலும் மறு வாக்குப்பதிவு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #kairanabypoll
Tags:    

Similar News