செய்திகள்

சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது

Published On 2018-05-28 23:35 GMT   |   Update On 2018-05-28 23:35 GMT
மத்திய அரசின் பாடத்திட்டமான சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது. #CBSEresults
புதுடெல்லி:

மத்திய அரசின் பாடத்திட்டமான சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இந்தியா முழுவதும் மார்ச் 5–ம் தேதி தொடங்கியது. இந்த தேர்வு ஏப்ரல் 4–ம் தேதி வரை நடைபெற்றது. தேர்வை 16 லட்சத்து 38 ஆயிரத்து 428 மாணவ, மாணவிகள் எழுதினார்கள்.

இந்நிலையில், சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது. தேர்வு முடிவை மாணவ–மாணவிகள் www.results.nic.in, www.cbseresults.nic.in, www.cbse.nic.in ஆகிய இணைய தளங்களில் பார்க்கலாம். இந்த ஆண்டு கேள்வித்தாள் லீக் உள்பட பல்வேறு பிரச்சனைகளுக்கு நடுவில் தேர்வுகள் நடைபெற்று முடிந்தன. அரியானா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் மறுதேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டது. 



இந்த தேர்வில் 10-ம் வகுப்பு வினாத்தாள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது போல், 12-ம் வகுப்பிற்கான பொருளாதாரவியல் பாடத்தின் கேள்வித்தாளும் வாட்ஸ்-அப்பில் வெளியாகி சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது. #CBSEresults
Tags:    

Similar News