செய்திகள்

பா.ஜ.க.வின் விருப்பத்திற்கு ஏற்ப நாங்கள் செயல்பட முடியாது - டிகே சிவகுமார்

Published On 2018-05-25 16:23 GMT   |   Update On 2018-05-26 04:08 GMT
24 மணி நேரத்திற்குள் விவசாயிகள் கடனை ரத்து செய்யவேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா விடுத்த எச்சரிக்கைக்கு, உங்களது விருப்பத்திற்கு ஏற்ப நாங்கள் செயல்பட முடியாது என்று காங்கிரஸ் தலைவர் டிகே சிவகுமார் கூறியுள்ளார்.
பெங்களூரு:

கர்நாடகாவில் காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சியமைத்து உள்ளது. முதல்-மந்திரியாக பதவியேற்ற குமாரசாமி, இன்று சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்தார். அவருக்கு ஆதரவாக 117 எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தார்கள்.

இதற்கிடையே மாநிலத்தில் புதிய அரசு அமைந்து 24 மணி நேரங்களுக்குள் விவசாய கடனை தள்ளுபடி செய்யவில்லை என்றால் 28-ம் தேதி மாநிலம் தழுவிய பந்த் நடத்தப்படும் என எடியூரப்பா எச்சரிக்கையை விடுத்தார். பாரதிய ஜனதாவின் விருப்பத்திற்கு ஏற்ப நாங்கள் செயல்பட முடியாது என காங்கிரஸ் பதிலளித்து உள்ளது.

அவர்கள் பொதுமக்களின் பணத்தை வீணடிக்க முடியாது, சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால் அது அவர்கள் உருவாக்கியதாக இருக்கும். அவர்கள் எங்களை கட்டாயப்படுத்தவும் முடியாது, மிரட்டவும் முடியாது. நாங்கள் பொறுப்பான அரசை நடத்துவோம், பாரதிய ஜனதாவின் விருப்பத்திற்கு ஏற்ப எல்லாம் செயல்பட முடியாது என காங்கிரஸ் தலைவர் டிகே சிவகுமார் கூறிஉள்ளார்.
Tags:    

Similar News