செய்திகள்

இந்தியா- நேபாளம் கூட்டு ராணுவ பயிற்சி- அடுத்த வாரம் தொடங்குகிறது

Published On 2018-05-24 12:46 GMT   |   Update On 2018-05-24 12:46 GMT
இந்தியா- நேபாளம் ஆகிய நாடுகள் இணைந்து இரண்டு வாரம் ராணுவ பயிற்சியில் ஈடுபட உள்ளதாக இந்திய ராணுவம் இன்று தெரிவித்துள்ளது. #MilitaryExercise
புது டெல்லி :

இந்தியா மற்றும் நேபாளம் நாட்டின் ராணுவத்தினர் அடுத்த வாரம் புதன்கிழமை முதல் கூட்டு ராணுவ பயிற்சியில் பங்கேற்க உள்ளனர். பயங்கரவாத தடுப்பு முயற்சியை இருநாடுகளும் தீவிரப்படுத்துவதை நோக்கமாக வைத்து உத்தரகாண்ட் மாநிலம் பிதோரகார் பகுதில் இந்த கூட்டு ராணுவ பயிற்சி நடைபெற உள்ளது.

“சூர்ய கிரண்” என பெயரிடப்பட்டுள்ள இந்த ராணுவ பயிற்சி மூலம் இருநாடுகளின் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் அதிகரிக்க முடியும். இதனால், மலைப்பிரதேசங்களில் நடைபெறும் பயங்கரவாத செயல்களை கட்டுக்குள் வைக்க முடியும். இரண்டு வாரம் நடைபெற உள்ள இந்த பயங்கரவாத தடுப்பு ராணுவ பயிற்சியின் மூலம் இருநாட்டு ராணுவ வீரர்களும் பெரும் அனுபவங்களை பரஸ்பரம் ஒருவருக்கு ஒருவர் பரிமாறிக்கொள்ள முடியும் என இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது

இந்த ராணுவ பயிற்சியில் இந்தியா மற்றும் நேபாளம் சார்பில் தலா 300 ராணுவ வீரர்கள் பங்கேற்க உள்ளனர் என்பது. குறிப்பிடத்தக்கது. #MilitaryExercise
Tags:    

Similar News