செய்திகள்

ஆட்சியை கவிழ்த்து விடாதீர்கள் - காங். எம்.எல்.ஏ.க்களுக்கு சோனியா, ராகுல் அறிவுரை

Published On 2018-05-24 08:01 GMT   |   Update On 2018-05-24 08:01 GMT
மதசார்பற்ற ஜனதா தள ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் யாரும் ஈடுபட்டு விட வேண்டாம் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு சோனியா, ராகுல் காந்தி அறிவுரை வழங்கி உள்ளார்கள். #KumaraswamySwearingIn #Congress
பெங்களூர்:

கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளம்- காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை அமைந்தது. மதசார்பற்ற ஜனதா தள மாநில தலைவர் குமாரசாமி முதல்-மந்திரியாக பதவியேற்றார். துணை முதல்-மந்திரியாக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் பரமேஸ்வர் பொறுப்பேற்றார்.

பதவியேற்பு விழாவில் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு, பினராயி விஜயன், நாராயணசாமி, மாயாவதி, அகிலேஷ் யாதவ், சரத் யாதவ், சீதாராம் யெச்சூரி, சரத்பவார் உள்பட அனைத்து எதிர்க்கட்சியினரும் திரளாக பங்கேற்றனர்.

குமாரசாமி பதவி ஏற்பதற்கு முன்பு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சோனியா காந்தி, ராகுல் காந்தி தலைமையில் நடந்தது. மல்லிகார்ஜுன கார்கே எம்.பி. முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் 78 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கும் சோனியா ராகுல் அறிவுரை வழங்கினார்கள்.

ஜனநாயகத்துக்கு விரோதமாக செயல்படுபவர்கள் மற்றும் வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். மதசார்பற்ற ஜனதா தள ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் யாரும் ஈடுபட்டு விட வேண்டாம்.

இவ்வாறு சோனியாவும், ராகுலும் காங்கிரஸ் எம்.எல். ஏ.க்களிடம் அறிவுறுத்தியதாக மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார். #Karnataka #KumaraswamySwearingIn #Congress #SoniaGandhi #RahulGandhi
Tags:    

Similar News