செய்திகள்

நெதர்லாந்து பிரதமர் மார்க் ருட்டே - மோடி சந்திப்பு

Published On 2018-05-24 07:50 GMT   |   Update On 2018-05-24 07:50 GMT
இரண்டு நாள் பயணமாக இன்று இந்தியா வந்த நெதர்லாந்து பிரதமர் மார்க் ருட்டே பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். #NetherlandsPM #MarkRutte #PMModi #Indiavisit

புதுடெல்லி:

நெதர்லாந்து நாட்டின் பிரதமரான மார்க் ருட்டே இரண்டு நாட்கள் பயணமாக இன்று (மே 24-ம் தேதி) காலை இந்தியாவுக்கு வந்தார். அவருடன் நெதர்லாந்து துணை பிரதமர் மற்றும் சில முக்கிய மந்திரிகளும் வந்துள்ளனர். மார்க் ருட்டே இந்தியாவுக்கு வருவது இது இரண்டாவது முறையாகும். 

இந்தியா வந்த மார்க் ருட்டே, பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இதையடுத்து, மார்க் ருட்டே டெல்லியில் நடைபெற உள்ள தலைமை நிர்வாக அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். இந்த கூட்டத்தில் 130 நாடுகளை சேர்ந்த 231 தொழிலதிபர்கள் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. இந்த பயணத்தின் போது நெதர்லாந்து பிரதமர் பெங்களூருவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துக்கு செல்வார் எனவும் கூறப்பட்டுள்ளது. #NetherlandsPM #MarkRutte #PMModi #Indiavisit
Tags:    

Similar News