செய்திகள்

தண்ணீர் பிரச்சனையை தீர்க்க தனி ஆளாக கிணறு தோண்டும் 70 வயது முதியவர்

Published On 2018-05-24 07:08 GMT   |   Update On 2018-05-24 07:08 GMT
மத்தியப்பிரதேசம் மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க 70 வயது முதியவர் தனி ஆளாக பெரிய கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. #70yearoldman #Haduavillage
போபால்:

மத்தியப்பிரதேசம் மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள கடுயா கிராமத்தைச் சேர்ந்தவர் சீதாராம் ராஜ்புட். கடுயா கிராமத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் அக்கிராமத்தை வறட்சி வாட்டி வதைத்து வருகிறது.


இந்நிலையில், 70 வயதான சீதாராம் தனது கிராமத்தின் குடிநீர் பிரச்சனையை போக்க எண்ணினார். இதனால் பெரிய கிணறு ஒன்றை தோட்ட நினைத்தார். தனி ஆளாக கிணறு தோண்டும் பணியை தொடங்கினார். மேலிருந்து ஏணி அமைத்து அதன் வழியாக மண்ணை தோண்டி மேலே எடுத்துச் செல்கிறார். இந்த வயதில் சீதாராமின் கிராமத்திற்காக செய்யும் செயல் அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுகுறித்து பேசிய சீதாராம், 'எங்கள் பகுதியில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதனை சரிசெய்ய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் கிணறு தோண்டும் பணியை தொடங்கும். இதற்கு கிராமத்தை சேர்ந்த யாரும் உதவவில்லை. தனியாக நான் இதை செய்து முடிப்பேன்' என கூறினார். அவரின் முயற்சியை அனைவரும் பாராட்டி வருகின்றனர். #70yearoldman #Haduavillage

Tags:    

Similar News