செய்திகள்

காஷ்மீரில் ராணுவ ஹெலிகாப்டர் தரையிறங்கியபோது விபத்து

Published On 2018-05-24 04:12 IST   |   Update On 2018-05-24 04:12:00 IST
காஷ்மீரில் ராணுவ ஹெலிகாப்டர் தரையிறங்கியபோது விபத்துக்குள்ளானத்தில் ஹெலிகாப்டரில் இருந்த 4 பேரும் அதிர்ஷ்டவசமாக காயங்கள் ஏதும் இன்றி உயிர் தப்பினர். #AirForceHelicopter #JammuKashmir
ஜம்மு:

காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் இருந்து இந்திய விமானப்படைக்கு சொந்தமான ராணுவ ஹெலிகாப்டர் நேற்று காலை வழக்கமான ரோந்து பணிக்காக புறப்பட்டு சென்றது. இதில் 2 விமானிகள் மற்றும் 2 பயணிகள் இருந்தனர்.

இந்த ஹெலிகாப்டர் நாதாடாப் என்கிற இடத்தில் தரையிறங்க முயன்றபோது திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. இதையடுத்து அந்த ஹெலிகாப்டர் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இருப்பினும் ஹெலிகாப்டரில் இருந்த 4 பேரும் அதிர்ஷ்டவசமாக காயங்கள் ஏதும் இன்றி உயிர் தப்பினர். விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. #AirForceHelicopter #JammuKashmir
Tags:    

Similar News