செய்திகள்

அறுவை சிகிச்சைக்காக மதுரையில் இருந்து டெல்லிக்கு பறந்து வந்த இதயம்

Published On 2018-05-23 21:33 GMT   |   Update On 2018-05-23 21:33 GMT
நோயாளியின் அறுவை சிகிச்சைக்காக மதுரையில் இருந்து டெல்லிக்கு பறந்து வந்த இதயத்தை, விமான நிலையத்தில் இருந்து மருத்துவமனைக்கு சாலை வழியாக 13 நிமிடங்களில் எடுத்துச் சென்றனர். #Delhi #Airport #Hospital #Heart
புதுடெல்லி:

டெல்லியை சேர்ந்த 45 வயது ஆசாமிக்கு இதயத்தில் கோளாறு ஏற்பட்டதை தொடர்ந்து அவர் கங்காராம் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்கள் முடிவு செய்தனர். அவருக்கு பொருத்துவதற்கான இதயம் மதுரையில் இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து, மதுரையில் இருந்து டெல்லிக்கு தனி விமானம் மூலம் இதயம் பறந்து வந்தது. டெல்லி விமான நிலையம் வந்த இதயம் டாக்டர்கள் குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

விமான நிலையத்தில் இருந்து 13 கி.மீ தொலைவில் உள்ளது கங்காராம் மருத்துவமனை. எனவே, இதயத்தை பாதுகாப்பாகவும், விரைவாகவும் கொண்டு வந்து நோயாளிக்கு பொருத்த முடிவு செய்தனர். இதற்காக போக்குவரத்து போலீசார் மற்றும் விமான நிலைய அதிகாரிகளை தொடர்பு கொண்டனர்.

அதன்படி, இதயத்தை சுமந்து செல்லும் ஆம்புலன்ஸ் விரைவில் மருத்துவமனை சென்று சேருவதற்கு வசதியாக போக்குவரத்து ஒழுங்குபடுத்தப்பட்டது. இதனால் 13 கிலோ மீட்டர் தொலைவை வெறும் 11 நிமிடங்களில் கடந்த இதயம் கங்காராம் மருத்துவமனையை அடைந்தது. அதன்பின் டாக்டர்கள் இதய் அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர்.

மதுரையில் இருந்து டெல்லி மருத்துவமனைக்கு வந்த இதயத்தை, விரைவாக கொண்டுவர உதவிய நல் உள்ளங்களுக்கு  அனைத்து தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். #Delhi #Airport #Hospital #Heart
Tags:    

Similar News