செய்திகள்
6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 65 வயது காமுகன் தலைமறைவு
உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆறு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பியோடிய 65 வயது காமுகனை போலீசார் தேடி வருகின்றனர்.
லக்னோ:
உத்தரப்பிரதேச மாநிலத்தின் பராபங்கி மாவட்டத்தில் ஆறு வயது சிறுமி ஒருவர் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 65 வயது மதிக்கத்தக்க ஒருவர் அந்த சிறுமியை கடத்தி சென்றுள்ளார்.
அந்த நபர் சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டார். அந்த சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து பெற்றோரிடம் கூறியுள்ளார். இதையடுத்து அந்த நபர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், ஆறு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பியோடிய 65 வயது காமுகனை போலீசார் தேடி வருகின்றனர்.