செய்திகள்

டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் அன்புமணி ராமதாசுக்கு எதிரான வழக்கு ஜூலை 16-ந் தேதிக்கு ஒத்திவைப்பு

Published On 2018-05-23 05:01 IST   |   Update On 2018-05-23 05:01:00 IST
டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட 10 மீதான வழக்கின் விசாரணை ஜூலை 16-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதிகள் அறிவித்தனர். #AnbumaniRamadoss
புதுடெல்லி:

பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் சுகாதாரத்துறை மந்திரியாக இருந்தார். அவருடைய பதவி காலத்தில் மத்திய பிரதேச மாநிலம் இந்தூர், உத்தரபிரதேச மாநிலம் பரேலி ஆகிய இடங்களில் 2 தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு மத்திய அரசு அங்கீகாரம் வழங்கியது. இதில் முறைகேடு நடந்ததாக அன்புமணி ராமதாஸ் உள்பட 10 பேர் மீது சி.பி.ஐ. வழக்கு தொடர்ந்தது. டெல்லியில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் நீதிபதி அஜய்குமார் ஜெயின் தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகிறது. இதற்கிடையில் இந்த வழக்கின் மீதான விசாரணைக்கு தடை விதிக்க கோரி அன்புமணி ராமதாஸ் தரப்பில் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு வருகிற 25-ந் தேதி விசாரணைக்கு வருகிறது.

இந்த நிலையில் டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட 10 மீதான வழக்கு மீண்டும் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, “அன்புமணி ராமதாஸ் தரப்பில் டெல்லி ஐகோர்ட்டில் தொடரப்பட்டு உள்ள வழக்கு 25-ந்தேதி விசாரணைக்கு வருகிறது. எனவே இங்கு நடைபெறும் வழக்கின் விசாரணை ஜூலை 16-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது” என நீதிபதிகள் அறிவித்தனர்.

Tags:    

Similar News