செய்திகள்

எம்.பி. பதவியில் இருந்து எடியூரப்பா ராஜினாமா: சபாநாயகர் ஏற்றார்

Published On 2018-05-22 22:38 GMT   |   Update On 2018-05-22 22:38 GMT
எடியூரப்பாவின் எம்.பி. பதவி ராஜினாமாவை நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஏற்றுக்கொண்டு விட்டதாக மக்களவை செயலக வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன. #Yeddyurappa #Resignation
புதுடெல்லி:

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பாரதீய ஜனதா கட்சி தலைவர்கள் எடியூரப்பாவும், ஸ்ரீராமுலுவும் நாடாளுமன்ற மக்களவை எம்.பி.க்களாக பதவி வகித்து வந்தனர். இருவரில் எடியூரப்பா, ஷிமோகா தொகுதியில் இருந்தும், ஸ்ரீராமுலு, பெல்லாரி தொகுதியில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தனர்.

இந்த நிலையில் சமீபத்தில் நடந்த கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட எடியூரப்பா (ஷிகாரிபுரா), ஸ்ரீராமுலு (மோலகல்முரு) ஆகிய இருவரும் வெற்றி பெற்றனர்.

தேர்தல் முடிவுகள் வெளியான உடனேயே, அவர்கள் தங்களது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தனர். அவர்களது ராஜினாமாவை நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஏற்றுக்கொண்டு விட்டதாக மக்களவை செயலக வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன.  #Yeddyurappa #Resignation
Tags:    

Similar News