செய்திகள்

அக்டோபர் 2-ந் தேதி ரெயில்களில் சைவ தின அனுசரிப்பு பரிந்துரை நிறுத்திவைப்பு

Published On 2018-05-23 04:00 IST   |   Update On 2018-05-23 04:00:00 IST
அக்டோபர் 2-ந் தேதி ரெயில்களில் சைவ தின அனுசரிப்பு குறித்து ரெயில்வே வாரியத்தின் பரிந்துரையை மறு உத்தரவு வரும்வரை நிறுத்தி வைக்கும்படி உத்தரவு பிறப்பித்தது. #VegetarianDay #IndianRailway
புதுடெல்லி:

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள் கொண்டாட்டத்தையொட்டி 2018, 2019, 2020 ஆகிய 3 ஆண்டுகளிலும் அக்டோபர் 2-ந்தேதியை சைவ தினமாக அனுசரிக்க பரிந்துரை செய்து அண்மையில் ரெயில்வே வாரியம், மண்டல ரெயில்வே மேலாளர்களுக்கு ஒரு கடிதத்தை எழுதியது.

அதில், சைவ தின அனுசரிப்பையொட்டி அன்று ரெயில்கள், ரெயில் நிலையங்கள் மற்றும் ரெயில்வேயின் இதர கட்டிடங்கள் எதிலும் அசைவ உணவு வினியோகிக்க கூடாது என்று கூறப்பட்டு இருந்தது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.

இதைத்தொடர்ந்து ரெயில்வே வாரியத்தின் பரிந்துரையை மறு உத்தரவு வரும்வரை நிறுத்தி வைக்கும்படி அனைத்து மண்டலங்களின் ரெயில்வே தலைமை வர்த்தக மேலாளர்களுக்கும் ரெயில்வே அமைச்சகம் நேற்று அறிவுறுத்தி உத்தரவு பிறப்பித்தது.  #VegetarianDay #IndianRailway
Tags:    

Similar News