செய்திகள்

காந்தி ஜெயந்தியன்று சைவ உணவு மட்டுமே வழங்கப்படும் - இந்திய ரெயில்வே திட்டம்

Published On 2018-05-21 11:59 IST   |   Update On 2018-05-21 11:59:00 IST
மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு காந்தி ஜெயந்தியன்று சைவ உணவு வழங்க இந்திய ரெயில்வே திட்டமிட்டு வருகிறது. #GandhiJayanti #IndianRailways
புதுடெல்லி:

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் இந்திய ரெயில்வே புதிய திட்டம் ஒன்றை செய்து வருகிறது. அதன்படி 2018-20 வரை தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு ரெயில்களில் காந்தி ஜெயந்தி அன்று சைவ உணவு மட்டுமே வழங்கப்படும். அந்நாளை சைவ நாளாக கொண்டாட திட்டம் வகுத்து வருகிறது.



மேலும், மகாத்மா காந்தி உப்பு சத்தியாகிரகம் மேற்கொண்ட தண்டி பகுதிக்கு சபர்மதி பகுதியிலிருந்து சிறப்பு ரெயில் விடவும் திட்டமிட்டுள்ளது. ரெயில் டிக்கெட்டுகளில் மகாத்மா காந்தியின் உருவப்படம் அச்சிடப்படும் என கூறியுள்ளது.


இத்திட்டத்திற்கு கலாச்சார அமைச்சகம் ஒப்புதல் அளித்தால் விரைவில் செயல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது. இதே போல் கடந்த மாதம்,  மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தேசிய குழு ஒன்றை அமைத்தார்.  #GandhiJayanti #IndianRailways

Tags:    

Similar News