செய்திகள்

மேம்பாலம் இடிந்து விழுந்ததில் பலியானவர்களின் சடலத்தை பெற லஞ்சம் கேட்ட அவலம்

Published On 2018-05-16 13:36 GMT   |   Update On 2018-05-16 13:43 GMT
உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசியில் மேம்பாலம் இடிந்து விழுந்ததில் 18 பேர் பலியான நிலையில், அவர்களது சடலத்தை பெற உறவினர்களிடம் ரூ.200 லஞ்சம் கேட்ட அவலம் நிகழ்ந்துள்ளது. #VaranasiFlyoverCollapse
லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசியில் நேற்று புதிதாக கட்டப்பட்டுவந்த மேம்பாலம் திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில், மேம்பாலத்தின் கீழ் காரில் இருந்தவர்கள் சிக்கிக்கொண்டனர். இடிபாடுகளில் சிக்கி 18 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அவர்களது சடலம் பனாரஸ் இந்து பல்கலைக்கழக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பலியானவர்களின் உறவினர்கள் சடலத்தை பெற வந்த போது, அங்கிருந்த பிணவறை துப்புரவாளர் ரூ.200 லஞ்சம் கேட்டுள்ளார். இதனை அடுத்து, அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அந்த உதவியாளரை போலீசார் கைது செய்தனர்.

மேம்பால விபத்து தொடர்பாக இதுவரை நான்கு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. 
Tags:    

Similar News