செய்திகள்

மாணவர் வருகை பதிவேட்டில் பெயர் வாசிக்கும்போது ஜெய் ஹிந்த் கூறுவது கட்டாயம்

Published On 2018-05-16 12:55 IST   |   Update On 2018-05-16 12:55:00 IST
மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் மாணவர் வருகை பதிவேட்டில் பெயர் வாசிக்கும்போது இனி கட்டாயமாக ஜெய் ஹிந்த் கூற வேண்டும் என மாநில அரசு அறிவித்துள்ளது. #mpgovt #jaihind
போபால்:

மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் ஜனவரி மாதம் முதல் தேசியக்கொடி ஏற்றுவது கட்டாயமாக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நவம்பர் மாதம் முதல் வருகை பதிவேட்டில் பெயர் வாசிக்கும் போது பிரசண்ட் என்பதற்கு பதிலாக இனி 'ஜெய் ஹிந்த்' சொல்ல வேண்டும் என மாநில அரசு ஆணையிட்டுள்ளது.

அதன்படி இந்த முறையானது சட்னா மாவட்டத்தில் முதன்முதலாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 1-ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது.



இந்த திட்டத்தின் மூலம் மாணவர்களிடையே நாட்டுப்பற்றை அதிகப்படுத்தலாம். ஜெய் ஹிந்த் என கூறுவது அனைத்து மத மாணவர்களாலும் ஏற்றுக்கொள்ளப்படும். இது இளம் தலைமுறையினர் நமது பாரம்பரியத்தை மறக்காமல் இருக்க உதவும் என கூறப்பட்டது.

இந்நிலையில், மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணாக்கார்கள் வருகை பதிவேட்டில் பெயர் வாசிக்கும்போது தங்கள் பெயருக்கு பதிலாக கட்டாயமாக ஜெய் ஹிந்தி கூற வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. #mpgovt #jaihind



Tags:    

Similar News