செய்திகள்

கேரளாவில் பயங்கரவாத பயிற்சி முகாம் - 18 பேருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை

Published On 2018-05-15 08:09 GMT   |   Update On 2018-05-15 08:09 GMT
கேரளாவில் சிமி இயக்கம் நடத்திய பயிற்சி முகாம் தொடர்பான வழக்கில் 18 குற்றவாளிகளுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து கொச்சியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
திருவனந்தபுரம்:

நாட்டிற்கு எதிராக சிமி என்ற இயக்கம் கடந்த 2007-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கர்நாடகா, மத்திய பிரேதசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பயிற்சி முகாம்களை நடத்தியது. இதைதொடர்ந்து, கேரளா மாநிலம் கோட்டயம் என்ற பகுதியிலும் சிமி இயக்கம் ரகசிய முகாம் நடத்தியது.

இந்த முகாமில்,  ஆயுத பயிற்சி, வெடி குண்டு தயாரித்தல், கயிறு ஏறும் பயிற்சி, மோட்டார் சைக்கிள் ரேஸ் பயிற்சி போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டது. மேலும், பயங்கரவாத தாக்குதல்களை நடத்த தேவையான அனைத்து பயிற்சிகளும் வழங்கப்பட்டு வந்தது.
 
இதுதொடர்பாக பலர் கைது செய்யப்பட்டனர். கொச்சியில் உள்ள தேசிய புலனாய்வு அமைப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், நேற்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி, குற்றம்சாடப்பட்ட 35 பேர்களில், 18 பேரை குற்றவாளிகளாக அறிவித்தார். 17 பேரை இந்த வழக்கில் இருந்து விடுவித்தார்.

இந்நிலையில், குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட்டது. 18 குற்றவாளிகளுக்கும் 7 ஆண்டு சிறை தண்டனை மற்றும் தலா 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். #WagamonSIMIcampcase #KochiSpecialNIAcourt
Tags:    

Similar News