செய்திகள்

மேற்கு வங்க பஞ்சாயத்து தேர்தல் - இன்று காலை வாக்குப்பதிவு

Published On 2018-05-14 00:02 GMT   |   Update On 2018-05-14 00:02 GMT
மேற்கு வங்க மாநிலத்தின் பஞ்சாயத்து தேர்தலில் இன்று காலை வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. #WestBengalPolls #panchayatelections
கொல்கத்தா:

மேற்கு வங்க மாநிலத்தின் பஞ்சாயத்து தேர்தல் நடைபெற உள்ளது. 58 ஆயிரத்துக்கும் அதிகமான இடங்கள் உள்ள அம்மாநிலத்தின் 38,605 இடங்களில் இன்று தேர்தல் நடைபெற உள்ளது.

621 ஜில்லா பரிஷத், 6,157 பஞ்சாயத்து சமிட்டி மற்றும் 31,827 கிராம பஞ்சாயத்துகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறும் என அம்மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பஞ்சாயத்து தேர்தலை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அசாம், ஒடிசா, சிக்கிம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பாதுகாப்பு படையினர் வரவழைக்கப்பட்டு உள்ளனர். மேலும், 46 ஆயிரம் மாநில போலீசார், 12 ஆயிரம் கொல்கத்தா போலீசாரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

ஏற்கனவே 34.2 சதவீத இடங்களுக்கு வேட்பாளர்கள் போட்டியிடாததால் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. #WestBengalPolls #panchayatelections
Tags:    

Similar News