செய்திகள்

72.13 சதவீதம் அளவுக்கு கர்நாடக தேர்தலில் வரலாறு காணாத வாக்குப்பதிவு - தேர்தல் அதிகாரி தகவல்

Published On 2018-05-13 14:18 GMT   |   Update On 2018-05-13 14:18 GMT
கர்நாடக தேர்தலில் 70 சதவீதம் வாக்குப்பதிவு நடந்ததாக வந்த செய்திகளுக்கு மாறாக வரலாறு காணாத அளவில் 72.13 சதவீதம் வாக்குகள் பதிவானதாக அம்மாநில தேர்தல் அதிகாரி இன்று தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

கர்நாடக சட்டசபைக்கு நேற்று நடைபெற்ற தேர்தலில் சுமார் 70 சதவீதம் வாக்குப்பதிவு நடந்ததாக நேற்றிரவு தகவல்கள் வெளியாகின. இதை அனைத்து ஊடகங்களும் பதிவு செய்திருந்தன.

இந்நிலையில், இந்த தேர்தலில் 72.13 சதவீதம் வாக்குகள் பதிவானதாக கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சீவ் குமார் இன்று தெரிவித்துள்ளார்.

கர்நாடக சட்டசபைக்கு 1952-ம் ஆண்டு நடைபெற்ற முதல் தேர்தலில் இருந்து இதுவரை நேற்று பதிவான வாக்கு சதவீதம் முந்தைய தேர்தல் வரலாறு காணாத வகையில் அமைந்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

1989, 1990,1994-ம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில் 69 சதவீதம் வாக்குகள் பதிவானதாகவும், 2004, 2008-ம் ஆண்டுகளில் நடந்த சட்டசபை தேர்தல்களில் 65 சதவீதம் வாக்குகள் பதிவானதாகவும், கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 71.45 சதவீதம் வாக்குகள் பதிவானதாகவும் அவர் தெரிவித்துள்ளார். #KarnatakaAssembly polls #72.13percent 

Tags:    

Similar News