செய்திகள்

சிசிடிவி திட்டத்துக்கு அனுமதி மறுப்பு - டெல்லி கவர்னர் மாளிகைக்கு ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் பேரணி

Published On 2018-05-12 12:46 GMT   |   Update On 2018-05-12 12:46 GMT
பொது இடங்களில் சி.சி.டி.வி. திட்டத்துக்கு அனுமதி வழங்க மறுக்கும் டெல்லி கவர்னர் மாளிகைக்கு ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் வரும் திங்கட்கிழமை பேரணியாக செல்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. #ArvindKejriwal #CCTVCamera #Kejriwal #AAPMLAs
புதுடெல்லி:

பெண்களின் பாதுகாப்பு கருதி டெல்லி முழுவதும் சுமார் ஒன்றரை லட்சம் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த ஆளும் ஆம் ஆத்மி அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் இதற்கு கவர்னர் அனில் பைஜால் ஒத்துழைப்பு வழங்காமல் காலம்தாழ்த்தி வருகிறார். 

இந்நிலையில், பொது இடங்களில் சி.சி.டி.வி. திட்டத்துக்கு அனுமதி வழங்க மறுக்கும் டெல்லி கவர்னர் மாளிகைக்கு வரும் திங்கட்கிழமை ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் பேரணியாக செல்லப் போவதாக டெல்லி துணை முதல் மந்திரி மணிஷ் சிசோடியா இன்று அறிவித்துள்ளார். 

இதுதொடர்பாக, டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டெல்லி துணை முதல் மந்திரி மணிஷ் சிசோடியா, ‘டெல்லி முழுவதும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தும் திட்டம் தொடர்பான முதல்கட்ட பணிகள் கடந்த மூன்றாண்டுகளாக நடைபெற்று வருகின்றன.

இதற்கான டெண்டரும் விடப்பட்ட பின்னர் தற்போது இந்த திட்டத்தில் ஓட்டை கண்டிபிடித்து முடக்கிப்போட முயற்சித்து வருகிறார். இதுதொடர்பாக, கவர்னர் அனில் பைஜாலை சந்தித்து வலியுறுத்துவதற்காக வரும் திங்கட்கிழமை மாலை 3 மணியளவில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் கவர்னர் மாளிகைக்கு பேரணியாக செல்கின்றனர்.

இந்த தகவல் கடிதம் மூலம் கவர்னருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டார். #ArvindKejriwal #CCTVCamera #Kejriwal #AAPMLAs
Tags:    

Similar News