செய்திகள்

கர்நாடகத்தில் அமைதியாக தொடங்கியது வாக்குப்பதிவு - வாக்காளர்களுக்கு மோடி அழைப்பு

Published On 2018-05-12 09:01 IST   |   Update On 2018-05-12 09:01:00 IST
கர்நாடக மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கும்படி பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். #KarnatakaElections2018 #ModiCallVoters
பெங்களூரு:

கர்நாடக சட்டசபையின் பதவிக்காலம் வரும் 28-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனால் கர்நாடகத்தில் இன்று தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றுவருகிறது.

கர்நாடக மாநிலத்தில் மொத்தம் 224 தொகுதிகள் உள்ளன. இதில் ஜெயநகர் தொகுதி பாஜக வேட்பாளர் விஜயகுமார் மரணம் அடைந்ததால் அந்த தொகுதிக்கும், கட்டுக்கட்டாக வாக்காளர் அடையாள அட்டை பறிமுதல் செய்யப்பட்ட ஆர்.ஆர் நகர் தொகுதிக்கும் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 222 தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடைபெறுகிறது.

ஆண் வாக்காளர்கள் 2.52 கோடி, பெண் வாக்காளர்கள் 2.44 கோடி, 4,552 மாற்றுப்பாலினத்தவர்கள் என மொத்தம் இந்த தேர்தலில் மொத்தம் 4.96 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். இதற்காக மாநிலம் முழுவதும் 55 ஆயிரத்து 600 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் 3.5 அரசு பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.



இந்நிலையில், நேபாளத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, கர்நாடக வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

‘கர்நாடகாவில் வாழும் என் சகோதர சகோதரிகள் இன்று அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும். குறிப்பாக, இளைஞர்கள்  தவறாமல் வாக்களித்து தங்கள் பங்களிப்புடன் இந்த ஜனநாயக திருவிழாவை சிறப்படைய செய்ய வேண்டும்’ என மோடி டுவிட்டரில் கூறியுள்ளார். #KarnatakaElections2018 #ModiCallVoters
Tags:    

Similar News

வடம்- Movie Review