செய்திகள்

ராகுல் காந்தி பிரதமராக 10 முதல் 15 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும் - அத்வாலே

Published On 2018-05-12 03:56 IST   |   Update On 2018-05-12 03:56:00 IST
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமராக இன்னும் 10 முதல் 15 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும் என மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார். #Rahulgandhi #RamdasAthawale
மும்பை:

கர்நாடகம் மாநில சட்டசபை தேர்தலில் பிரசாரம் செய்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மை பெற்றால் பிரதமராக பதவியேற்க தயார் என்றார்.

இந்நிலையில், ராகுல் காந்தி பிரதமராக இன்னும் 10 முதல் 15 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும் என மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.



இதுதொடர்பாக மகாராஷ்டிராவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்ற ஆசை குறித்து பேசியுள்ளார். ஆனால், நான் என்ன நினைக்கிறேன் எனில், அவர் இன்னும் 10 முதல் 15 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும்.

கர்நாடக தேர்தலில் பாஜக நிச்சயம் வெற்றி பெறும். காங்கிரஸ் கட்சி பாஜகவை தலித்களுக்கு எதிரான கட்சி என சித்தரிக்க முயலுகிறது. மக்களுக்கு உண்மை நிலை நன்கு தெரியும் என தெரிவித்துள்ளார். #Rahulgandhi #RamdasAthawale
Tags:    

Similar News