செய்திகள்

முட்ட வந்த மாட்டிடம் இருந்து தப்பிய மந்திரி

Published On 2018-05-09 23:03 IST   |   Update On 2018-05-09 23:03:00 IST
பஞ்சாப் மாநிலத்தில் கோவில் பணிகளை பார்வையிட சென்ற மந்திரி சித்து, மாடு முட்டுவதில் இருந்து அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார். #Sidhu #BullAttack
ஜெய்ப்பூர்:

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் உள்ள துர்கை கோவிலில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை பார்வையிட மாநில மந்திரி சித்து இன்று சென்றார். பணிகளை பார்வையிட்ட பின்னர் அங்கிருந்த செய்தியாளர்களை சந்தித்து பேசிக் கொண்டிருந்தார்.



அப்போது கோவிலை நோக்கி ஒரு காளை மாடு தறிகெட்டு ஓடிவந்தது. இதைக்கண்டதும் செய்தியாளர்கள் மற்றும் மந்திரி சித்து அங்கிருந்து ஓடினர்.

ஆனாலும் மாடு முட்டியதில் 2 செய்தியாளர்கள் லேசான காயமடைந்தனர். இந்த தாக்குதலில் மந்திரி சித்து அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. #Sidhu #BullAttack
Tags:    

Similar News