செய்திகள்

ஆந்திராவில் சிறுமி கற்பழிப்பு - ரூ.5 லட்சம் நிதியுதவி

Published On 2018-05-04 15:20 IST   |   Update On 2018-05-04 15:20:00 IST
ஆந்திரப்பிரதேசம் மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் ரிக்‌ஷா டிரைவரால் கற்பழிக்கப்பட்ட சிறுமிக்கு 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். #andhrarape
ஐதராபாத்:

ஆந்திரப்பிரதேசம் மாநிலம் குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமியை பக்கத்து வீட்டைச் சேர்ந்த ரிக்சா டிரைவர் கற்பழித்ததாக புகார் அளிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குற்றவாளியை கைது செய்ய வேண்டி காவல் நிலையத்தில் முன்பு போராட்டம் செய்கின்றனர்.

பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் 10 போலீசார் கொண்ட சிறப்பு படையினர் குற்றவாளியை தேடி வந்தனர். இதற்கிடையில், தலைமறைவாக உள்ள குற்றவாளி தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன் என உறவினர் ஒருவருக்கு போன் மூலம் தகவல் அளித்துள்ளார். இதையடுத்து கிருஷ்ணா ஆற்றில் குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் ஆற்றில் தேடி வந்தனர். அப்போது அடையாளம் தெரியாத உடல் ஒன்று ஆற்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டது. அது குற்றவாளி உடையதாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில்,  பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்   என மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். #andhrarape

Similar News