செய்திகள்

கோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்

Published On 2018-05-04 12:37 IST   |   Update On 2018-05-04 12:37:00 IST
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மருத்துவமனையில் கோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #mumbaihospital #ratnibblepatient
மும்பை:

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிமந்தர் குப்தா என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்ததால் கோமா நிலையில் இருந்தார்.

கடந்த மாதம் அவரை மருத்துவமனையில் இருந்த எலி கண்ணில் கடித்து விட்டதாக குடும்பத்தார் புகார் அளித்தனர். இதனை மருத்துவமனை நிர்வாகம் மறுத்தது. அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் உடனடியாக சிகிச்சை அளித்தனர். எலி கடித்ததில் குப்தாவிற்கு அதிக அளவில் ரத்தம் வெளியேறிதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பரிமந்தர் குப்தா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. அரசு மருத்துவமனையில் நோயாளி ஒருவர் எலி கடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #mumbaihospital #ratnibblepatient

Similar News