செய்திகள்

கொல்கத்தாவில் நேதாஜி சிலை உடைப்பு - பொதுமக்கள் போராட்டம்

Published On 2018-05-03 10:08 GMT   |   Update On 2018-05-03 10:08 GMT
கொல்கத்தாவில் உள்ள ஒரு பூங்காவில் நிறுவப்பட்டிருந்த நேதாஜி சிலையை மர்ம நபர்கள் உடைத்ததை கண்டித்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். #NetajiStatueVandalised
கொல்கத்தா:

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவின் நார்கேல்தங்கா பகுதியில் குழந்தைகள் பூங்கா உள்ளது. இந்த பூங்காவினுள் நேதாஜி சுபாஷ் சந்திர போஷ் சிலை நிறுவப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட இந்த மார்பளவு சிலையினை நேற்று இரவு யாரோ மர்ம நபர்கள் சேதப்படுத்தி உள்ளனர்.

இன்று காலை பூங்காவிற்கு சென்ற பொதுமக்கள், சிலை உடைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இந்த தகவல் பரவியதையடுத்து அப்பகுதியில் ஏராளமான பொதுமக்கள் திரண்டு, போராட்டம் நடத்தினர். சிலையை உடைத்த நபர்களை கைது செய்ய வலியுறுத்தி கோஷமிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்வதாக உறுதி அளித்தனர். மேலும், அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  சேதமடைந்த சிலை துணியால் மூடப்பட்டு பாதுகாக்கப்படுகிறது.

கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தலைவர்களின் சிலைகள் உடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. #NetajiStatueVandalised
Tags:    

Similar News