செய்திகள்

சென்னையில் வாலிபரை கொடூரமாக தாக்கிய போக்குவரத்து காவலர்கள் - வைரலாகும் வீடியோ

Published On 2018-04-03 17:04 IST   |   Update On 2018-04-03 17:13:00 IST
சென்னையில் ஹெல்மட் போடாமல் வந்த வாலிபரை போக்குவரத்து காவலர்கள் கொடூரமாக தாக்கிய வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சென்னை:

சென்னையின் தி.நகர் பகுதியில் உள்ள ஒரு துணிக்கடையில் இருந்து பிரகாஷ் என்ற வாலிபர் மோட்டார் சைக்கிளில் தனது தாய் மற்றும் தங்கையுடன் வந்துள்ளார். ஹெல்மட் அணியாமல் மூன்று பேர் ஒரே வாகனத்தில் சென்றதாக போக்குவரத்து போலீசார் அவரை மடக்கி பிடித்தனர். அவரை வண்டியை இங்கேயே விட்டு செல்ல கூறினர். இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்துள்ளது. இதனிடையே போலீசார் பிரகாஷை இழுத்துச் சென்றனர்.

என் மகனை விடுங்கள் என பிரகாஷின் தாயார் உதவி ஆய்வாளரிடம் கூறியுள்ளார். இதனால் பிரகாஷின் தாயை போலீசார் தாக்கியதாக கூறப்படுகிறது. கோபமடைந்த பிரகாஷ் போலீசின் சட்டையை பிடித்துள்ளார். இதில் போலீஸ் சட்டையில் இருந்த ஸ்டார் கீழே விழுந்தது. இது போலீசாருக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

அங்கிருந்த மூன்று போலீசாரும் பிரகாஷை சரமாரியாக தாக்கினர். அவரை கம்பத்தில் கட்டி வைத்து கையை உடைக்க முயன்றனர். இதனை தடுக்க முயன்ற பிரகாஷின் தாய் மற்றும் சகோதரியை பெண் போலீசார் பிடித்து வைத்தனர். பட்ட பகலில் பொதுமக்கள் முன்னிலையில் வாலிபரை போலீசார் தாக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. அதனை கண்ட அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். போலீசாரின் செயலுக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. #tamilnews

Similar News