செய்திகள்

ஒக்கி புயலால் பாதிக்கப்பட்டவர்களை மீட்க 4½ லட்சம் சதுர மைல் தூரம் கடலில் தேடும் பணி நடந்தது

Published On 2018-01-29 03:52 GMT   |   Update On 2018-01-29 03:52 GMT
ஒக்கி புயலால் பாதிக்கப்பட்டவர்களை மீட்க சுமார் 4½ லட்சம் சதுர மைல் பரப்பளவில் கடலில் மீனவர்களை தேடும் பணி நடந்ததாக கடற்படை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கொச்சி:

தமிழக, கேரள கடலோர பகுதிகளில் கடந்த ஆண்டு நவம்பர் 30-ந் தேதி ‘ஒகி’ புயல் கடுமையாக தாக்கியது. இதனால் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ஏராளமான மீனவர்கள் புயலில் சிக்கி இறந்தனர். பலருடைய நிலை இன்னும் என்ன ஆனது என்றே தெரியவில்லை.

இந்நிலையில் ஒகி புயல் பாதிப்பு மீட்பு பணி குறித்து கடற்படை செய்தித்தொடர்பாளர் ஒருவர் கூறியதாவது:-

கடந்த 2004-ம் ஆண்டு சுனாமி பாதிப்புக்கு பிறகு மிகப்பெரிய தேடுதல் வேட்டை ‘ஒகி’ புயலால் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்காக நடந்தது. கடற்படையுடன், கடலோர காவல் படையும் இணைந்து 4 வாரங்கள் மீட்பு பணியில் ஈடுபட்டன. இதற்காக 16 கப்பல்கள் மற்றும் கடற்படை விமானங்கள், ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டன.

சுமார் 4½ லட்சம் சதுர மைல் பரப்பளவில் கடலில் மீனவர்களை தேடும் பணி நடந்தது. கடலில் தத்தளித்த தமிழ்நாடு, கேரளா, லட்சத்தீவு பகுதிகளை சேர்ந்த 136 மீனவர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர். 6 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. மாலத்தீவு நாட்டின் உதவியுடனும் மீட்பு பணி நடந்தது.

இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
Tags:    

Similar News