செய்திகள்

வீட்டுப்பாடம் செய்து வராததால் ஆசிரியர் சொல்லி மாணவியை 168 முறை அடித்த சக மாணவிகள்

Published On 2018-01-28 01:25 GMT   |   Update On 2018-01-28 01:25 GMT
வீட்டுப்பாடம் செய்து வராததால் ஆசிரியர் சொல்லி மாணவியை சக மாணவிகள் 14 பேர் சேர்ந்து 168 முறை அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Students #Slapped #Homework
போபால்:

மத்திய பிரதேச மாநிலம், தண்ட்லா என்ற இடத்தில் உள்ள நவோதயா வித்யாலயாவில் 6-ம் வகுப்பு படித்து வரும் மாணவி உடல் நலக்குறைவு காரணமாக வீட்டுப்பாடத்தை முழுமையாக செய்து வரவில்லை.

இதில் ஆத்திரம் அடைந்த அறிவியல் ஆசிரியர் மனோஜ் சர்மா, அந்த மாணவிக்கு சக மாணவிகள் 14 பேர் தினமும் 2 அடி கொடுக்குமாறு உத்தரவிட்டு உள்ளார்.

அதன்படி அந்த மாணவிகளும் அடித்து உள்ளனர். 6 நாட்கள் இப்படி 14 மாணவிகளும் அடித்து உள்ளனர். மொத்தம் 168 அடி விழுந்து உள்ளது.

இதன் காரணமாக அந்த மாணவி பீதியும், அச்சமும் அடைந்தார். பள்ளிக்கூடத்துக்கு செல்ல மறுத்து விட்டார்.

இது பற்றி அந்த மாணவியின் தந்தை சிவபிரதாப் சிங், பள்ளி அதிகாரிகளிடமும், போலீஸ் நிலையத்திலும் புகார் செய்தார். தன் மகளுக்கு உடல் நலம் சரியில்லை என்பது தெரிந்து இருந்தும் இப்படி தண்டனை கொடுத்து உள்ளதாக அவர் வேதனையுடன் தெரிவித்து உள்ளார்.

இப்படி தண்டனை வழங்கியதை நட்பு ரீதியிலான தண்டனை என்று பள்ளி முதல்வர் சாகர் நியாயப்படுத்தி உள்ளார்.

போலீசார் தங்களுக்கு புகார் வந்து உள்ளதை உறுதி செய்தனர். அதே நேரத்தில் வழக்கு எதுவும் போடவில்லை என்றனர். இருப்பினும் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்துமாறு மாவட்ட கலெக்டர் ஆசிஷ் சக்சேனா உத்தரவிட்டு உள்ளார்.  #Students #Slapped #Homework #tamilnews
Tags:    

Similar News