செய்திகள்

லே பகுதியில் சிக்கிய அமெரிக்கரை இந்திய விமானப்படை பத்திரமாக மீட்டது

Published On 2017-09-27 16:06 GMT   |   Update On 2017-09-27 16:06 GMT
ஜம்மு-காஷ்மீரின் லே பகுதியில் சிக்கிய அமெரிக்கர் ஒருவரை இந்திய விமானப் படை பத்திரமாக மீட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீநகர்:

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் லடாக் பகுதியில் அமெரிக்க பெண்மணியான மார்கரெட் ஸ்டோன் கடந்த 6-ம் தேதி மலையேற்றத்துக்காக வந்தார். சில தினங்களுக்கு முன் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் அங்கிருந்து வெளியேற முடியாமல் சிக்கி தவித்தார்.

தான் அவதிப்பட்டு வருவது குறித்து மார்கரெட் அமெரிக்க தூதரகத்துக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனால் அமெரிக்க தூதரகம், இந்திய வெளியுறவு துறையை தொடர்பு கொண்டது. உடனடியாக லே பகுதியில் சிக்கி அவதிப்பட்டு வரும் மார்கரெட் ஸ்டோனை மீட்கும்படி கேட்டுக் கொண்டது.



இதைதொடர்ந்து, விமானப்படையின் ஹெலிகாப்டர் லே பகுதிக்கு விரைந்து சென்றது. அங்கு காயத்துடன் அவதிப்பட்டு கொண்டிருந்த மார்கரெட் பத்திரமாக மீட்கப்பட்டார்.

இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், மார்கரெட்டின் உடல்நிலை மோசமாக உள்ளது. எனவே அவரை லே பகுதியில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளோம். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார் என தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News