செய்திகள்

பிரணாப் முகர்ஜியுடன் பணியாற்றியது பெருமையாக இருந்தது: பிரதமர் மோடி பேச்சு

Published On 2017-07-02 22:55 IST   |   Update On 2017-07-02 22:56:00 IST
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியுடன் பணியாற்றியது பெருமையாக இருந்தது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
புதுடெல்லி:

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் வருகின்ற ஜூலை 12-ம் தேதியுடன் முடிவடைகிறது. அந்த பதவிக்கான தேர்தல் வருகின்ற ஜூலை 17-ம் தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில், ‘ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி - ஒரு ஸ்டேட்மேன்’ என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா தலைநகர் புதுடெல்லியில் இன்று நடைபெற்றது.

ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார். புத்தகத்தின் முதல் பதிப்பை பிரணாப் முகர்ஜியிடம் மோடி வழங்கினார். அந்த புத்தகத்தில் 340 புகைப்படங்கள் உள்ளது. வருண் ஜோஷி என்ற புகைப்படக்காரர் அந்த புகைப்படங்களை எடுத்தார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், ”ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உடன் பணியாற்றியதில் பெருமையாக இருந்தது. ஒரு தந்தையைப் போல் இருந்து வழிகாட்டினார்” என்றார்.

இதனையடுத்து பிரணாப் முகர்ஜி பேசுகையில், எனக்கும் பிரதமர் மோடிக்கு இடையே அடிப்படையில் கருத்து வேறுபாடுகள் உள்ளது. இருப்பினும் எங்கள் பணிகளில் அது தலையிடாமல் பார்த்துக் கொண்டோம் என்றார்.

Similar News