செய்திகள்

கொழும்பு அருகே நடுக்கடலில் சரக்குக்கப்பலில் தீ விபத்து - தீயணைக்கும் பணியில் இந்திய கடற்படை கப்பல்

Published On 2017-04-05 01:42 IST   |   Update On 2017-04-05 01:42:00 IST
இலங்கை கடல் எல்லையில் நடுக்கடலில் பயணம் செய்த சரக்குக் கப்பல் எம்.வி டேனியலாவில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணிக்காக இந்திய கடற்படை கப்பல்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன.
புதுடெல்லி:

இலங்கை கடல் எல்லையில் நடுக்கடலில் பயணம் செய்த சரக்குக் கப்பல் எம்.வி டேனியலாவில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணிக்காக இந்திய கடற்படை கப்பல்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன.

இலங்கை கடல் எல்லையில் கொழும்பில் இருந்து 11 கடல் மைல் தொலைவில் நடுக்கடலில் பயணம் செய்த எம்.வி டேனியலா என்ற சரக்குக் கப்பலில் நேற்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. நடுக்கடலில் ஏற்பட்ட தீ என்பதால் கப்பல் நிறுவனம் இந்திய கடற்படையின் உதவியை நாடினர்.

இதையடுத்து இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ் காரியல் மற்றும் ஐ.என்.எஸ் தர்ஷாக் ஆகிய இரண்டு கப்பல்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. எனினும் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்திற்கான காரணம் தெரியவில்லை.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள கடற்படை செய்தித் தொடர்பாளர் டி.கே சர்மா ,”கொழும்பில் இருந்து மேற்கு பகுதியில் 11 கடல்மைல் தொலைவில் வணிகக் கப்பல் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வந்துள்ளது. தீயை அணைக்கும் பணிக்காக கடற்படை கப்பல்கள் அனுப்பப்பட்டுள்ளது” எனக் கூறினார்.

Similar News