செய்திகள்

கம்பளாவை நடத்த கர்நாடகா அரசு சார்பில் அவசரச் சட்டம் நிறைவேற்றம்

Published On 2017-02-11 23:50 GMT   |   Update On 2017-02-12 03:18 GMT
கர்நாடகாவில் விவசாயிகளின் பாரம்பரிய விளையாட்டான கம்பளாவை நடத்த கர்நாடகா அரசு சார்பில் அவசரச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
பெங்களூரு:

கர்நாடகாவில் விவசாயிகளின் பாரம்பரிய விளையாட்டான கம்பளாவுக்கு விதித்துள்ள தடையை நீக்க சட்டப்பேரவையில் அவசர  சட்டம் கொண்டு வரப்பட்டது.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போல் கர்நாடக மாநிலத்தின் கடலோர மாவட்டங்களிலும் கம்பளா என்ற பெயரில் எருமை  மாடுகளை சேற்றில் ஓடவிடும் பந்தயம் நூற்றாண்டு காலமாக நடத்தப்பட்டு வருகிறது.

ஜல்லிக்கட்டு போட்டிக்கு விதிக்கப்பட்ட தடை போல கம்பளாவுக்கும் கடந்த சில ஆண்டுகளாக தடை விதிக்கப்பட்டது. எனவே  தடைசெய்யப்பட்ட கம்பளாவை திரும்பவும் நடத்தக்கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கம்பளாவை நடத்த கர்நாடக அரசு அவசர சட்டம் கொண்டுவந்துள்ளது. தடை விதிக்கப்பட்டுள்ள கம்பளா போட்டிகளை நடத்தக்கோரி பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து கர்நாடக சட்டப்பேரவையில் அவசர  சட்டத்துக்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

அதனைத்தொடர்ந்து, கம்பளா போட்டியை நடத்த அவசர சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்களின் கோரிக்கை  நிறைவேறும் என்றார்.

Similar News