செய்திகள்

இந்தியாவில் தொழில்நுட்ப கல்வித் தரத்தை மேம்படுத்த உலக வங்கியுடன் ஒப்பந்தம்

Published On 2017-02-02 12:55 GMT   |   Update On 2017-02-02 12:55 GMT
இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்களில் தொழில்நுட்ப கல்வித்தரத்தை மேம்படுத்தும் வகையில், சுமார் 201.50 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஒப்பந்தம் உலக வங்கியுடன் கையெழுத்தாகி உள்ளது.
புதுடெல்லி:

இந்தியா முழுவதும் சுமார் 7064 தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் உள்ளன. இங்கு பயிலும் மாணவர்கள் நவீன தொழில்நுட்ப அறிவை பெறும் வகையிலும், கல்வி நிறுவனங்களுக்கு தொழில்நுட்ப உபகரணங்களை அளிக்கும் நோக்கத்திலும் மத்திய அரசானது, உலக வங்கியுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்திய மதிப்பில் சுமார் 1400 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த நிதி ஒப்பந்தம் நேற்று கையெழுத்தாகியுள்ளதாக நிதி அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

நாட்டில் பின் தங்கிய மாநிலங்கள், அந்தமான் நிகோபார் தீவுகள் மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு தரமான தொழில்நுட்ப பாடத்திட்டத்தை இந்த ஒப்பந்தத்தின் மூலம் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Similar News