செய்திகள்

சிறுநீரக செயல்பாடு பாதிப்பு: சுஷ்மா சுவராஜுக்கு சிகிச்சை நீடிப்பு

Published On 2016-11-16 00:07 GMT   |   Update On 2016-11-19 04:10 GMT
நீரிழிவு நோய் இருப்பதால், அவரது சிறுநீரக செயல்பாடு பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அவருக்கு ‘டயாலிசிஸ்’ செய்யப்பட்டு வருவதாகவும் ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன.
புதுடெல்லி:

மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், சிறுநீரக கோளாறு காரணமாக, கடந்த 7-ந் தேதி, டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவருக்கு 20 ஆண்டுகளாக நீரிழிவு நோய் இருப்பதால், அவரது சிறுநீரக செயல்பாடு பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அவருக்கு ‘டயாலிசிஸ்’ செய்யப்பட்டு வருவதாகவும் ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன.

‘அவரது உடல்நிலை சீராக இருக்கிறது. அவர் மேலும் சில நாட்கள் ஆஸ்பத்திரியில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவார்’ என்று டாக்டர்கள் கூறினர்.

Similar News