செய்திகள்
மேற்கு வங்காள பா.ஜ.க. மகளிர் அணி தலைவி ரூபா கங்குலி மீது திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் தாக்குதல்
மேற்கு வங்காள பா.ஜ.க. மாநில மகளிர் அணி தலைவி ரூபா கங்குலி மீது திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்கள் தாக்குதல் நடத்தியதில் அவருக்கு காயம் ஏற்பட்டது.
கொல்கத்தா:
மேற்குவங்காள பா.ஜ.க.-வின் மகிளா மோர்ச்சா தலைவியாக ரூபா கங்குலி. நடிகையான ரூபா கங்குலி பா.ஜ.க.-வில் இணைந்து சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளரிடம் மோசமான தோல்வியை தழுவினார்.
இந்நிலையில் இன்று கொல்கத்தாவின் டயமண்ட் ஹார்பர் அருகே ரூபா கங்குலி தாக்கப்பட்டார். மேற்கு வங்காளத்தில் தேர்தலுக்கு பிறகு கட்சி தொடண்டர்கள் இடையே வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. வன்முறையால் பாதிக்கப்பட்ட ஒரு பா.ஜ.க. தொண்டரை நலம் விசாரித்துவிட்டு கொல்கத்தா திரும்பிக்கொண்டிருந்த போது கங்குலி தாக்கப்பட்டுள்ளார்.
ரூபா கங்குலி திரிணாமுல் காங்கிரஸ் தொடண்டர்களால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. லேசான காயம் அடைந்துள்ள கங்குலி தற்போது அரசு மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.