செய்திகள்

விஜய் மல்லையாவின் மாநிலங்களவை எம்.பி. பதவி பறிபோகிறது

Published On 2016-04-25 19:39 IST   |   Update On 2016-04-25 19:39:00 IST
இந்திய பொதுத்துறை வங்கிகளில் பல்லாயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாமல் இங்கிலாந்து சென்றுவிட்ட தொழில் அதிபர் விஜய் மல்லையாவின் எம்.பி. பதவி விரைவில் பறிபோகவுள்ளது.
புதுடெல்லி:

வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு பணத்தை திருப்பிச் செலுத்தாத தொழில் அதிபர் விஜய் மல்லையாவின் பாஸ்போர்ட்டை மத்திய அரசு முடக்கி உள்ளது. இங்கிலாந்தில் உள்ள அவரை அமலாக்கத்துறையின் விசாரணைக்காக இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்து வருகிறது. அவரை கைது செய்ய மும்பை நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்துள்ளது.

இந்த நிலையில், விஜய் மல்லையாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பறித்து அவரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாராளுமன்ற நெறி முறைகள் குழு உறுப்பினர் சரத் யாதவ், அனைத்தும் முடிந்துவிட்டது என சூசகமாக கூறியுள்ளார்.

பாராளுமன்ற நெறி முறைகள் குழு விஜய் மல்லையாவிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஒரு வாரத்திற்குள் விளக்கம் அளிக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. விஜய் மல்லையா அளிக்கும் விளக்கம் பற்றி மே 3-ம் தேதி கூடும் பாராளுமன்ற நெறி முறைகள் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, அதன் முடிவுகள் மாநிலங்களவைக்கு அனுப்பிவைக்கப்படும்.

எனவே தற்போதைய உள்ள சூழ்நிலையில் விஜய் மல்லையாவின் மாநிலங்களவை எம்.பி. பதவி பறிபோவது உறுதியாகியுள்ளது.

Similar News